-->

Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அப்பா, நீங்க எங்கே இருக்கீங்க ?

 



அன்பு நண்பரே,

மனிதனுக்கு இருக்கும் குணங்களில் மிக உயர்ந்தது மற்றவர்கள் மீது அன்பு காட்டுவதும் அவர்களிடத்தில்அக்கறை கொள்வதும் ஆகும். உண்மையான அன்பில் தன்னலமான செயல்கள் ஏதும் இருப்பதில்லை.தன்னலமற்ற அன்பு என்பதுஒரு தாய் தன் குழந்தை-யிடம் காட்டும் அன்பை போன்றது. இருப்பினும்,இதற்கும் மேலான அன்பு ஒன்று உள்ளது. அந்த அன்பு பிறருடைய நன்மைக்காகவோ அல்லது தனக்கு அன்புக்- குரியவர்களுக்காகவோ ஒருவர் தானாகவே முன்வந்து தன்னுடையவைகளை தியாகம் செய்வதற்கு இணையானது. மற்றவர்களை காப்பாற்றுவதற்காக ஒரு மேலான தியாக செயலின் ஓர் உண்மை சம்பவத்தை நாம் இங்கு காணலாம்.

 

"அப்பா, நீங்க எங்கே இருக்கீங்க ?"

 

ஓர் ஆற்றின் குறுக்கே தானாக திறந்து மூடக் கூடிய இரயில் தண்டவாளத்துடன் இணைந்த பாலம் ஒன்று இருந்தது. ஏறக்குறைய ஒரு நாளில் பலமுறை அந்த ஆற்றில் கப்பல்கள் கடந்து போவதும் வருவதுமாய் இருக்கும்படி அந்த இரயில் தண்டவாளம் பாலத்திற்கு இணையாக அமைந்திருந்தது. ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட நேரத்தில் இரயில் வரும் பொழுது அந்த பாலம் ஒரு பக்கமாக நகர்ந்து இரயில் தண்டவாளங்களை இணைத்து அதன் மீது இரயில் செல்லும்படி வழியை அமைக்கும். அந்த ஆற்றின் ஒரு கரையில் ஒரு சிறியஅறையில் அந்த பாலத்தை கண்காணிப்பவர் அமர்ந்து அதை இயக்குவார். அந்த கண்காணிப்பாளரின் மகன் பள்ளி முடிந்ததும் அடிக்கடி தன் தகப்பனிடம் வந்து சிறிது நேரம் பேசி இருந்து செல்வான். அச்சிறுவன் இரயில் வரும்பொழுதும் தன் தந்தை கட்டுப்பாட்டு அறையிலிருந்து பாலத்தை இயக்கும் பொழுதும் அது இயங்கும் அழகையும், அதன்மீது இரயில் வேகமாக செல்வதையும் பார்த்து பரவசமடைவான்.


ஒருநாள் அந்த கண்காணிப்பாளர் அந்த நாளின் கடைசி இரயில் வரும் நேரத்திற்காக காத்திருந்தபொழுது அந்த தானியங்கி பாலம் முறையாக செயல்படாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பாலம் முறையாக மூடப்பட்டு வில்லையென்றால் அப்பாலத்தின் மீது வரும் இரயில் தடம்புரண்டு ஆற்றில் விழ நேரிடும். இப்பொழுது அந்த நாளின் கடைசி இரயில் அதிக பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்தது. எனவே அவர் நெம்புக் கோலின் உதவியால் கண்காணிப்பு அறையிலிருந்த இயந்திரத்தை இயக்கி அந்த ஆற்றின் குறுக்கே இருக்கவேண்டிய பாலத்தின் தண்டவாளங்களை இணைக்க துரிதப்படுத்திக் கொண்டிருந்தார் .


தூரத்தில் இரயில்வரும் சத்தத்தை அவர் கேட்டதும் அவசரமாக தண்டவாளங்களை இணைக்க முயற்சி செய்தார். நெம்புகோலின் பின்புறமாக சாய்ந்து அந்த இயந்திரம் சரியாக இயங்கும்படி செய்துக்- கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென "அப்பா நீங்க எங்கே இருக்கீங்க" என்று கூப்பிடும் தன் மகனின் சத்தத்தைக் கேட்டு அவருடைய இருதயத்தின் இரத்தம் உறைந்தது. அச்சிறுவன் தன் தந்தையை பார்ப்பதற்காக இரயில் தண்டவாளத்தின்மீது நடந்து வந்துக் கொண்டிருந்தான். தந்தை தன் மகனைப் பார்த்து மகனே! சீக்கிரம் ஓடிவா என்று சத்தமிட்டு அலறினார். ஆனாலும் அந்த இரயில் சிறுவனை நோக்கி மிக அருகில் வந்துக்கொண்டிருந்தது. அச்சிறுவனின் சின்னஞ்சிறு கால்கள் அந்த இரயில் தன்னை நோக்கி வருவதற்கு முன்பாக வேகமாக அப்பாலத்தை கடக்க

உதவவில்லை. அந்த இரயில் தண்டவாளம் இன்னும் சரியாக பொருந்தாத நிலையில் அம்மனிதன் தன் அன்பு மகனை காப்பாற்ற நினைத்து அந்த நம்புக்கோலை அப்படியே விட்டுவிட்டார். ஆனால் சரியான சமயத்தில் அந்த நெம்புகோலை கொண்டு இயந்திரத்தை இயக்கி தண்டவாளங்களை சரியாக இணைக்காவிட்டால் வேகமாக வரும் இரயிலை காப்பாற்ற முடியாதென்று உணர்ந்தார். அப்பொழுது, அவர் தன் அன்பு மகன் பலியாக வேண்டுமா? அல்லது இரயிலில் பயணம் செய்பவர்கள் பலியாக வேண்டுமா? என்பதை தீர்மானிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தார்.

அம்மனிதர் உடனே தீர்மானித்து அந்த இரயில்தண்டவாளங்கள் சரியாக இணையும்படி செய்ய திரும்பிவந்தார். அப்பொழுது அதிவேகமாக வந்த அந்த இரயில் பாலத்தை பாதுகாப்பாக கடந்து சென்றது இரயிலில் பயணம் செய்த யாருமே அந்த இரயில் இரக்கமற்ற முறையில் அந்த சிறுவனின் உடலை சின்னாபின்னமாக்கி ஆற்றில் வீசி எறிந்ததையுயோ அந்த இரயில் பாலம் முழுவதையும் கடக்கும்வரை அவர் அந்த நெம்புக்கோலை விடாமல் மனதை கடினப்படுத்திக் கொண்டு பிடித்திருந்ததையும் யாரும் அறியவில்லை. இரயிலில் பயணம் செய்த மக்களை காப்பாற்றுவதற்காக தன்மகனை தியாகம் செய்த செய்தியை தன் மனைவியிடம் எப்படி சொல்வதென்று தெரியாமல் மிகுந்த சோகத்தோடு அன்று இரவு நடந்து சென்றதைப்போல அவர் என்றுமே நடந்து சென்றதில்லை.

 

இப்பொழுது இந்தக் கதையின் மூலம் அத்தகப்பன் இரயிலில் பயணம்செய்த மக்கள்மீது வைத்த அக்கறையை நீங்கள் புரிந்துக் கொண்டதைப்போல கடவுளின் அன்பையும் நீங்கள் புரிந்துக் கொள்ளலாம். நம்முடைய கடவுளாகிய பரலோகத்தின்  தந்தை தம்முடைய ஒரே மகனை நம்முடைய பாவங்களின் தண்டனைக்காக பலிகொடுத்ததை தூய மறைநூல் சொல்கின்றது.


கடவுள் நம்மீது வைத்த பேரன்பு


தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெரும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார் உலகிற்கு தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம்மகன் வழியாகஅதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார் (யோவான் 3:16,17)

 

அர்ப்பணிப்பு

 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடவுளுடைய மகன் உலகில் வாழ்ந்தபொழுது அவர் எதற்காக இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டாரோ அதை அறிந்தவராக இருந்தார். எனவே அவர் தம் வார்த்தைகளை கேட்கும்படி சூழ்ந்திருந்த மக்களிடம் கூறியதாவது:" நான் ஆடுகள் (மக்கள்) வாழ்வைப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.

நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்." (யோவான் 10: 10 , 11)

 

மாபெரும் தியாக பலியின் நோக்கம்

 

கடவுளுடைய மகனாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னையே தியாக பலியாக ஏன் ஒப்புக் கொடுத்தார்என்பதை தூய மறைநூல் இவ்வாறு கூறுகிறது:

ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல்அவரும் அதே இயில்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார். வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்.

(எபிரேயர் 2: 14-15)

 

கடவுளுடைய அன்பளிப்பும் மக்களின் மீட்பும்

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக செய்தமாபெரும் தியாகத்தினால் கிடைத்த கடவுளுடைய இந்தமீட்பு (அன்பின் கடவுளோடு நித்திய காலமாக நாம் என்றென்றும் இணைந்து வாழ்வது) எல்லா மனிதர்களுக்கும் இப்பொழுது இலவசமாக கிடைத்துள்ளது. கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்தநன்மையையும் அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும் இனிவரும் காலங்களிலும் எடுத்துக் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார். நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை. இது மனிதச்செயல்களால் ஆனது அல்ல எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது.

(எபேசியர் 2: 7-9)

 

கடவுளுடைய அன்பின் ஆழத்தை அறிந்துக் கொள்ளுதல்

 

கடவுளுடைய இந்த நிகரற்ற அன்பை நீங்களும் உங்கள் சொந்த வாழ்வில் இயேசு கிறிஸ்துவின் மேல் நீங்கள் வைக்கும் நம்பிக்கையின் மூலமாக அந்த அன்பை அறிந்து அனுபவிக்கலாம் என்பதை கடவுளுடைய வார்த்தையாகிய தூய மறைநூல் வாக்களிக்கின்றது. நீங்கள் கிறிஸ்துவின் அன்பில் வளரும் பொழுது உங்களுக்காக கடவுள் செய்த அந்த மாபெரும் அன்பை முழுமையாகக் கண்டுக் கொள்வீர்கள்.


நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடி கொள்வாராக ! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம் உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக ! அதன்மூலம் கடவுளின் முழு நிறைவையும் பெற்றுக்கொள்வீர்களாக !

 (எபேசியர்3:17-19)



நன்றி : The Bible Society of India, Banglore. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்